கவனம் பெறத் துவங்குகிறாய்
உன் குரலும் மொழியும்
மெல்ல மெல்ல பிடிக்கத்துவங்கி
பித்தமாய் மாறும் பாடலை ஒத்திருக்கிறது
நீ மொழியொன்றை வைத்திருக்கிறாய்
உனக்கே உனக்கேயான மொழியொன்று
நீ பெரும்பாலான சமயங்களில்
அம்மொழியில் மட்டுமே பேசுகிறாய்
அம்மொழி கிளைகளில் தொங்கும்
தூக்கணாங்குருவிகளின் கூடுகளைப் போல்
தோற்றமளிக்கிறது எனக்கு
வீசும் காற்றில்
ஆடும் கூடுகளின் திசைகளைக் கொண்டு
உன் மொழியை புரிந்துகொள்ள முயல்வதுண்டு
நீ அவ்வபோது உன் மொழியில்
கள்ளக்குறும்புகளை முத்தங்களை
பேசுவதாய் தோன்றுமெனக்கு
கொஞ்சம் கொஞ்சமாய்
உன் மீது பித்தேறத் துவங்குகிறது
நீ என் பித்தமாகத் துவங்குகிறாய்
#மூக்கனாங்கவுறு போல ஊன்னெனப்பு சீம்பாலு வாசம் போல உஞ்சிரிப்பு
very long time before

